ஒரு வருடத்திற்கு அதிக லாபம் கிடைக்க தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம்.
வங்கிகளுக்கு நிகராக தபால் நிலையங்களிலும் பெரிய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு உத்தரவாதத்துடன் செயல்படும் இந்த திட்டங்களின் மூலம் நமக்கு நல்ல வட்டி லாபம் கிடைக்கின்றது. குறிப்பாக தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் நல்ல தேர்வாக இருக்கும். வயது வந்த ஒரு நபர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்ட ஒரு மைனர் தன்னுடைய பெயரில் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.
ஒரு தனிநபரால் ஒரு கணக்கை மட்டுமே தொடங்க முடியும். எனவே அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கி கணக்கை தொடங்கலாம். இந்திய போஸ்ட் வலைதளத்திலும் இதற்குரிய விண்ணப்பங்கள் தற்போது கிடைக்கின்றன. விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் வழங்கவேண்டும். இதனுடன் கே.ஒய்.சி ஆவணங்களையும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் வழங்கவேண்டும்.
நெட் பேங்கிங் வசதியையும் பெற முடியும் . சேமிப்பில் நிதி ஆண்டின் முடிவில் குறைந்தபட்சத் தொகை ரூ.500 இல்லாவிட்டால் ரூ.100 அபராதத் தொகை பிடித்தம் செய்யப்படும். இது ஒவ்வொரு நிதியாண்டு கடைசியிலும் கடைபிடிக்கபடும். ஒருவேளை அந்த கணக்கில் பணம் இல்லை என்றால் கணக்கு மூடப்பட்டுவிடும். அதேபோல கணக்கில் குறைந்தபட்சமாக ரூ.50 கூட எடுத்து கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
ஒரு மாதத்தின் பத்தாம் நாள் மற்றும் மாதத்தின் முடிவில் குறைந்தபட்ச தொகையை அடிப்படையாக கொண்டு வட்டி கணக்கிடப்படும். ஒருவேளை இருப்புத் தொகை 500 இல்லாவிட்டால் வட்டி எதுவும் கிடைக்காது . மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள வட்டியின் படி ஒவ்வொரு நிதி ஆண்டின் முடிவிலும் வட்டி பணம் உங்களுடைய கணக்கில் டெபாசிட் செய்யப்படும், கணக்கு மூடப்படும் போது அந்த மாதம் வரையிலான வட்டி உங்களுக்கு கிடைக்கும். இதில் வருடத்திற்கு 4% வட்டி லாபம் கிடைக்கிறது.