விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனதில் தைரியமும் புதிய தகவல்களால் தைரியமும் கிடைக்கும்.
நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்பு உங்களை தேடி வரும். சம்பள உயர்வு போன்ற நல்ல தகவல் வரக்கூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். மனவருத்தத்தில் சென்ற நண்பர்கள் வருத்தம் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும். பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் திறமை வெளிப்படும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அளவோடு ஏதேனும் ஈடுபட்டு வந்தால் தொல்லை இல்லை. யாருக்கும் உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். தேவை இருந்தால் மட்டுமே அணுகவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவைக்காக பணம் கடன் வாங்க சூழல் இருக்கும். சின்ன சின்ன கால தாமதம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மாணவக் கண்மணிகளுக்கு திறமைகள் வெளிப்படும். காதலின் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொண்டு வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.