Categories
அரசியல்

காங்கிரஸ் அமைத்த குழு…எந்த பயனும் இல்லை… கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்…

வரும் தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் எந்த பயனும் இல்லை என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக தனித்தனியாக கமிட்டிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். பொதுச் செயலாளர்கள் 57 பேர், துணைத் தலைவர்கள் 32 பேர், செயலாளர்கள் 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, 34 பேர் கொண்ட தேர்தல் குழு, 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, 16 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழு, 31 பேர் கொண்ட விளம்பரக் குழு, 38 பேர் கொண்ட பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் குறித்து அக்கட்சியின் எம்.பி.கார்த்திக் சிதம்பரம் அதிர்ப்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனும் இல்லை. நியமனம் செய்யப்பட்டவர்கள் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதனால் அவர்களுக்கு பொறுப்பும் இருக்காது. என்று கூறினார்.

Categories

Tech |