Categories
மாநில செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி! புயல் நிவாரணமாக ரூ.25,000 – அதிரடி அறிவிப்பு…!!

நிவர் மற்றும் புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ25, 000 கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு மற்றும் நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 13, 500 ரூபாய் என்பதை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ரூ.7410 என்பதை 10,000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 10,000 ரூபாய் என்பதை 25, 000 ரூபாயாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகையை தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக பட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டும் இந்த நிவாரணம் வழங்க வழி உள்ளது.

நிவர் மற்றும் புரெவி புயலினால் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்த காரணத்தினால் 2 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பைத் குறைத்து பதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரும் ஜனவரி 7 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |