பிக்பாஸில் இருந்து பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என பிரபல இசையமைப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் சக போட்டியாளரான ஆரியிடம் மரியாதைக் குறைவாக பேசுவது திமிராக நடந்து கொள்வது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சீசனில் சக போட்டியாளர்களின் வயதுக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை . பாலாஜியின் நடவடிக்கைகளால் பிக் பாஸ் ரசிகர்கள் சிலர் ஆவேசம் அடைந்துள்ளனர் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை பிரீஸ் டாஸ்க் நடைபெற்றபோது உள்ளே வந்த போட்டியாளர்களின் குடும்பங்கள் மூலம் அறிந்து கொண்டார் பாலாஜி. இதில் ஒரு கட்டத்தில் கடுப்பாகி சிவானியிடம் பேசிக்கொண்டிருக்கையில் ‘ஆரி டைட்டில் வின்னரானால் ஏற்றுக்கொள்ளவே முடியாது’ எனக் கூறினார் . நேற்றைய எபிசோடில் ஆரியிடம் மிக மோசமான முறையில் பாலாஜி நடந்துகொண்டது ஆரி ரசிகர்களை ஆவேச படுத்தியுள்ளது .
இது குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘பாலாஜி போன்ற போட்டியாளர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கக்கூடாது . கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடிக்கடி இது பல்வேறு வயதினரும் பார்க்கிற நிகழ்ச்சி எனக் கூறியுள்ளார் . அது உண்மையெனில் பாலாஜி பிக்பாஸில் இருந்து வெளியே அனுப்பப் படவேண்டும் . அல்லது இந்த நிகழ்ச்சிக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்து வயது வந்தவர்களுக்கு மட்டும் என தெளிவாக நிர்ணயம் செய்ய வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.