கனடாவில் திடீரென தோன்றிய மர்மத்தூண்கள் சேதப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் மர்மமான முறையில் தூண்கள் தோன்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் முதன்முதலாக அமெரிக்காவில் உள்ள utah என்ற மாநிலத்தில் மர்ம தூண் கண்டு பிடிக்கப்பட்டிருந்ததது. இதனைத்தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போலந்து போன்ற நாடுகள் உட்பட உலகெங்கும் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவிலும் ஒரு சில இடங்களில் இதே போல மர்மத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Toronto monolith has been vandalized less than 24hrs after being put up 🤦♂️-📹 dj_jonny_c #Toronto #TorontoCanada #TorontoCity #TorontoArt pic.twitter.com/dB1TN7Hkie
— blogTO (@blogTO) January 1, 2021
இந்நிலையில் கனடாவில் உள்ள Toronta என்ற நகரின் humber bay shores சுற்றுப்புறத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று காலை 11.5 அடி கொண்ட மர்மதூண் ஒன்று உருவாகியுள்ளது. மேலும் இந்த தூண் மீது சிவப்பு மற்றும் கருப்பு நிற வண்ணங்களை வரைந்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கடந்த புத்தாண்டு தினத்தன்று தான் இந்த தூண் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த மர்ம துணின் அருகே நின்று புகைப்படம் எடுப்பதற்காக குவிந்து வருகின்றனர். ஆனால் இந்த மர்ம தூண்களை எப்போது? யார் நிறுவினார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.