எடையில் மோசடி செய்ததால் விவசாயிகள் வியாபாரியையும், லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த வியாபாரி, சோபனபுரம் பகுதியில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வந்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு 40 டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து அவற்றை இரண்டு லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் மக்காச்சோளத்தை லாரிகளில் ஏற்றி சென்ற போது அதன் எடை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் சந்தேகப்பட்டனர்.
எனவே அந்த மூட்டைகளை லாரியிலிருந்து இறக்கி மீண்டும் எடை பார்த்தபோது 50 கிலோவிற்கு பதிலாக 60 கிலோ இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் அந்த வியாபாரியும், அவருடன் இருந்த புரோக்கர்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு அந்த இரண்டு லாரிகளையும் சிறைப்பிடித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபடடனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.