Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றித் திரியும் கால்நடைகள்… விபத்து ஏற்படுவதற்கான அபாயம்… குற்றம் சாட்டும் பொதுமக்கள்…!!

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டி பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சுமார் 24 வார்டுகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்குள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி, மளிகை கடைகள் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் வருகிறார்கள்.

ஆனால் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை இல்லாத காரணத்தால் சாலைகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலால் பரபரப்பாகவே காணப்படும்.இந்நிலையில் திருத்துறைப் பூண்டியில் உள்ள புதிய பேருந்து நிலையம், ரயில்வே கேட், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை போன்ற பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித் திரிகின்றன.

இதனையடுத்து சாலைகளின் குறுக்கே நிற்கும் மாடுகளால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளின் நடுவே செல்லும் மாடுகளை முறையாக அப்புறப்படுத்தி விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |