தொடர் மன உளைச்சல் மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ரஜினி சிங்கப்பூர் செல்ல உள்ளாராம்.
அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் அவர்கள் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் தொடங்க இருந்த கட்சியையும் நிறுத்தப் போவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் ரஜினி மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து உடலளவிலும், மனதளவிலும் அவர் மிகவும் சோர்வாக இருப்பதால் அவருக்கு போதுமான சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதற்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். உருமாறிய கொரோனா காரணமாக அமெரிக்கா செல்வதில் சிக்கல் எழுந்துள்ளதால், 2011 போலவே சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.