Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நியூ இயர் குஷி” இளம்பெண்ணின் அந்தரங்க சேட்டில்….. ரூ25,00,000 இழந்த நபர்….!!

தொலைபேசி வாயிலாக டேட்டிங் செல்ல வேண்டுமா என ஆசை வார்த்தை கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள பம்மல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது அதில் எதிர்முனையில் பேசிய பெண்ணொருவர் சந்திரசேகருக்கு ஆசையை தூண்டும் வகையில் டேட்டிங் செல்ல விருப்பமா என கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சில் மயங்கிய சந்திரசேகர் பதிவு கட்டணமாக 1,500 ரூபாய் செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து தொலைபேசியில் பேசிய பெண் சந்திரசேகரின் எண்ணிற்கு இளம் பெண்களின் போட்டோவை அனுப்பி வைத்துள்ளார்.  அதனைப் பார்த்ததும் நியூ இயர் உற்சாகத்தில் இருந்த சந்திரசேகர் அந்தப் பெண் மூன்று தவணையாக 25 லட்சம் ரூபாய் செலுத்த கூறியதையும் ஏற்று பணத்தை ஆன்லைன் மூலமாக கட்டியுள்ளார்.

ஆனால் அதன்பிறகு சந்திரசேகர் டேட்டிங் எப்போது என கேள்வி கேட்டால் எதிர்முனையில் பேசிய பெண் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சந்திரசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |