Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் விவரங்களை பாதுகாப்பது எப்படி..? எளிய வழிமுறை இதோ..!!

ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது.

ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

உங்கள் ஆதாரங்களை பாதுகாக்க யுஐடிஏஐ என்ற சில அம்சங்கள் உள்ளது. தவறான கைகளில் ஆதார் அட்டை கிடைத்தால் உங்கள் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படும். யுஐடிஏஐ மக்களுக்கு பாதுகாப்பான ஆதார் அட்டையை வழங்குகிறது. இது ஒரு வகையான மின்னணு ஆதார் அட்டை. இதனை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்துவமான 12 இலக்க எண்களையும், இந்த ஆதார் அட்டை பயனாளர்களுக்கு வழங்குகிறது.

என்ன செயல்முறை:

முதலில் நீங்கள் 1947 யில் getotp எழுதி எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உங்கள் தொலைபேசிக்கு ஓடிபி வரும்.

ஓடிபி பெற்ற பிறகு ஆதார் அட்டை தாரர்கள் LOCKUID என்று டைப் செய்து அதனுடன் ஆதார் எண்ணை பதிவிட்டு 1947 க்கு அனுப்ப வேண்டும்.

இப்போது ஆதார் எண் லாக் செய்யப்படும்.

Categories

Tech |