நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையினுள் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி நேற்று 17 மாநிலங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயங்குகிறார்கள். தடுப்பூசியின் தரத்தில் எந்த சமரசமும் இல்லை. எனது தடுப்பூசி பயன்தராது பக்கவிளைவுகள் ஏற்படும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.