Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெள்ளப்பெருக்கு குறைந்தது… அருவிகளில் குளிக்க அனுமதி… குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர்.  இதனையடுத்து மெயினருவியில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால்  ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்வது குறைந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது இதனையடுத்து மெயின் அருவியிலும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க காலை 10:00 மணி முதலே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தடை நீக்கப்பட்டதையடுத்து குற்றாலத்திருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது.

Categories

Tech |