சீன தொழிலதிபர் ஒருவர் சீன அரசாங்கத்தை விமர்சித்ததால் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன அரசு மற்றும் அதன் தற்போதைய நடவடிக்கைகள் போன்றவற்றை குறித்து கடுமையாக விமர்சித்த உலகில் பிரபலமான தொழிலதிபர் ஜாக் மா திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஆப்பிரிக்காவின் தொழில்முனைவோருக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்த ஜாக்மா அந்தப் பதவியிலிருந்தும் திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இணையதள பக்கத்திலும் ஜாக் மாவின் புகைப்படம் மற்றும் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜாக் மா சீன அரசு மற்றும் வங்கிகளை விமர்சித்து வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் சீன அரசாங்கம் திடீரென்று அவர் இந்நிறுவனத்தின் மீது அதிரடியாக எதிர்ப்பு விசாரணையை அறிவித்துள்ளது. மேலும் சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜாக் மா ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் உலகிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா பாதிப்பு தொடங்கிய காலகட்டங்களில் ஜாக்மாவிற்கு சொந்தமான அலிபாபா நிறுவனம் இலவசமாக முகக்கவசம் போன்ற பொருட்களை உலகம் முழுவதும் வழங்கியுள்ளது. மேலும் தற்போது வரை ஜாக் மா ஆபத்தில் மாட்டிக் கொண்டார் என்ற தகவல் வெளியாகவில்லை என்று பன்னாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளனர். சீன அரசாங்கம் தங்களின் கொள்கைகளுக்கு மாறாக வெளிப்படையாக விமர்சிப்பவர்களை ஒருபோதும் விட்டுவைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக, கடந்த மார்ச் மாதம் சீனாவின் மற்றொரு தொழிலதிபர் ஒருவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கோமாளி என்று விமர்சித்துள்ளார். இதனைத்தொடர்ந்து திடீரென்று அவர் ஊழல் முறைகேட்டில் கைதுசெய்யப்பட்டு 18 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுமார் 35 பில்லியன் பவுண்டுகளுக்கு சொந்தக்காரரான அதிபர் ஜாக் மா கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மாயமாகி இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.