போக்குவரத்து அதிகாரிகள் தார்பாய்கள் இல்லாத லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் அப்பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதன் மேற்புறத்தில் தார்ப்பாயால் மூடாமல் சென்றதை கவனித்தனர்.
இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரிகள் அந்த லாரிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவ்வழியாக வந்த நான்கு கார்களின் முன்பகுதியில் அரசின் உத்தரவை மீறி பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகளை அகற்றினர்.