Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் பரபரப்பு” சசிகலாவுடன் ஆலோசனை நடத்தும் டிடிவி…!!

டிடிவி தினகரன்  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும்  வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும்  குறைவான வாக்குகளையே பெற்றது.

Image result for டிடிவி தினகரன் சசிகலா

அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் நிலை குலைந்துள்ளனர். அமமுகவின் அரசியல் பயணம் இதோடு முடிந்தது என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தற்போது பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனால் இந்த சந்திப்புக்கு பின்  அமமுகவின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   

Categories

Tech |