Categories
மாநில செய்திகள்

ரூ.2,500 வாங்க முடியலையா…? கவலை வேண்டாம்…. பொங்கலுக்கு அப்புறம்கூட வாங்கிக்கலாம்…!!

பொங்கல் பரிசை குறித்த தேதிகளில் வாங்க முடியாதவர்கள் பொங்கல் முடிந்த பிறகு கூட வாங்கிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கொரோனா மற்றும் நிவரால் மக்கள் பாதிக்கப்பட்டதால்  பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 4 ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை ரேஷன் கடையில் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம்.

நாள்தோறும் 200 பேர் வீதம் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த தேதிகளில் வாங்காதவர்கள் 13ஆம் தேதி சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக் கரும்பு, தலா 20 கிராம் முந்திரி திராட்சை, ஒரு கிலோ சர்க்கரை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்க தேவையான பணத்தை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் இருந்தால் 044-2766240 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம் என்று நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பொங்கலுக்கு முன்பாக ரூ.2,500 பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் வரும் ஜனவரி 19ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |