தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்தியா முழுவதிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வருகிறது. அதிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய உருமாறிய கொரோனாவும் தற்போது பரவி வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என கூறியுள்ளார்.