தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள யூ.கொத்தபள்ளி என்ற கிராமத்தில் அரிஷ் என்பவர் வசித்து வருகிறார். அரிஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த அரிஷ் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இந்நிலையில் மயங்கி கிடந்தவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஹரிஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.