உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நின்றுவிடும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நிற்றல் வந்துவிடும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வில், உறவில் ஈடுபடாத பெண்களை விட வாராவாரம் அல்லது மாதமாதம் சீரான இடைவெளியில் உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வாய்ப்பு 28 சதவீதம் குறைகிறது.
மேலும் உறவு என்பது உடலுறவு, பாலியல் தூண்டல் மற்றும் பிற வகை பாலியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. அதனால் பெண்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தினமும் இல்லாவிட்டால் கூட வாரம் ஒரு முறையாவது உடலுறவு வைத்துக் கொள்வது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.