மலை உச்சியில் இருந்து காதலை ஏற்ற பெண் 650 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டில் 27 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவிக்க விரும்பியுள்ளார். இதையடுத்து 32 வயதுடைய தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்று உள்ளார். அப்போது தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய காதலை காதலி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் காதலை ஏற்ற அடுத்த நொடியே 650 அடி உயரத்தில் இருந்து அந்த பெண் தவறிக் கீழே விழுந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத அவருடைய காதலன் தன்னுடடைய காதலியை காப்பாற்ற பள்ளத்தில் குதித்துள்ளார். இதையடுத்து 50 அடி உயரத்திற்கு சென்றதும் மலை முகட்டை பிடித்துக் கொண்டு அதில் தொங்கியபடி இருந்துள்ளார். மேலும் அந்த காதலி பனிபடர்ந்த இடத்தில் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளார். அவரை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். காதலர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காதலை ஏற்ற பெண் 650 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.