திருக்கனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கனூர் அருகே வம்பு பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன்- ஜெயபிரதா. மணிவண்ணன் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதால் மிக முக்கிய தேவைகளுக்கு கூட விடுப்பு எடுக்காமல் இருந்துள்ளார் . இந்நிலையில் தனது கணவரிடம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்குமாறு ஜெயபிரதா கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மணிவண்ணன் நிறுவனத்தில் பணிக்கு அழைத்தல் செல்லத்தான் வேண்டும். எனினும் விடுமுறை எடுக்க முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு வீட்டிலுள்ள வராண்டாவில் மணிகண்டன் தூங்கியுள்ளார். இந்நிலையில் கணவனின் சமாதானத்தை ஏற்க முடியாமல் விரக்தி அடைந்த ஜெயபிரதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு சென்றபோது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஜெயப்பிரதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.