Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆகும்போது… பயப்படாம உடனே இத செய்யுங்க..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது.

உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும்.

வாகனம் ஓட்டும்போது காரில் முழு கவனம் செலுத்துங்கள். பிரேக் தோல்வியடைந்தால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காரை நிறுத்த முற்படவேண்டும். முதலில் காரின் வேகத்தை குறைத்து அதனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பிரேக் மீது அடிக்கடி காலை வைத்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். சிறிது நேரத்தில் சரியான அழுத்தத்தை பெற்றவுடன் பிரேக் வேலை செய்ய தொடங்கும். கார் டாப் கியரில் சென்று கொண்டிருந்தால். முதலில் அதனை படிப்படியாக குறைத்துக் கொண்டு வரவும்.

பீதியில் ஐந்தாவது கியர் நேரடியாக கொண்டு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விபத்து நேர தொடங்கும். ரிவர்ஸ் கியரை பயன்படுத்த மறக்க வேண்டாம். கிளட்சை மற்றும் பயன்படுத்துங்கள். ஆக்சிலரேட்டரை பயன்படுத்தாதீர்கள். போக்குவரத்தில் இருந்தால் மற்ற விளக்குகளை காட்டி ஆபத்து என்பதை சுட்டிக்காட்டவும். இந்த சூழ்நிலையில் வாகனத்தின் ஏசியை இயக்கவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது இயந்திரத்தின் அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் வேகத்தை குறைக்கும். ஹெட்லைட் எரிய விடுவதால் பேட்டரி மின்சாரம் குறைந்து கார் மெதுவாக இயங்கும். அருகில் மணல் இருந்தால் ஸ்டேரிங் கட்டுப்படுத்தி காரை அதனுள் விடவும். இதனால் கணிசமான வேகம் குறையும். ஹேண்ட்பிரேக்கை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். காரில் கியர் மாற்றும்போது லேசான ஹேண்ட் பேக்கை பயன்படுத்துங்கள். வேகம் 40 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் போது நேரடியாக ஹேண்ட்பிரேக்கை இழுப்பதன் மூலம் வேகம் கட்டுப்படுத்தப்படும்.

Categories

Tech |