வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டுரங்கன் தொட்டி என்ற கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். பாண்டுரங்கன் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரகுமார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்.
அங்கு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை கண்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, காந்தியை கைது செய்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.