Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி விளைவித்த காய்கறிகள்” வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி…. வெளியான தகவல்…!!

கிரிக்கெட் வீரர் தோனியின் வீட்டுத்தோட்ட காய்கறிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் தோனி தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் மிகப் பெரிய பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அங்கு இயற்கை விவசாயம் செய்து வரும் தோனி 40 முதல் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளார். இது அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது. தற்போது இந்த காய்கறிகளை ஜார்கண்ட் மாநில அரசு துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது .

இதற்காக வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏற்றுமதி செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இயற்கை உரங்களைக் கொண்டு தன்னுடைய பண்ணை வீட்டிலேயே தோனி விவசாயம் செய்து இருக்கிறார் என்பது பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Categories

Tech |