Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஓராண்டில்… இளம்பெண் செய்த செயல்… கைது செய்யப்பட்ட கணவர்….!!

குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சக்திவேல் – தனலட்சுமி. சக்திவேல் மண்பாண்டம் தொழில் செய்துவருகிறார். இத்தம்பதியருக்கு  திருமணமாகி ஓராண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நல குறைவால் தனலட்சுமி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குழந்தை இல்லை என்பதால்  கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு செல்வது தொடர்பாக சக்திவேலுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி தற்கொலை செய்வதற்காக நேற்று 100 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும்  தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு  செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தனலட்சுமியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தனலட்சுமியின் தந்தை பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Categories

Tech |