Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீகாந்தின் ‘எக்கோ ‘… படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின் … வெளியான தகவல்கள்…!!!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘எக்கோ’ படத்தில் பிரபல ஹீரோயின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகர் ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எக்கோ ‘. சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடிக்கிறார் . அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கும் இந்தப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, கும்கி அஸ்வின், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது .

Pooja Jhaveri acts all goofy in her quirky Instagram picture | Gujarati  Movie News - Times of India

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக பூஜா ஜாவேரி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் துவாரகா படத்தில் நடித்தவர். மேலும் ரைட் ரைட் ,எல் 7, பாம் போலேநாத் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகிலும் இவர் நடிகர் தனுஷின் தொடரி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் அதர்வாவின் ‘ருக்குமணி வண்டி வருது’ படத்தில் நடித்துள்ளார்.

Categories

Tech |