Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி போடு! திமுக ஆட்சிக்கு வந்தால்…. “கல்விக்கடன் ரத்து” – மு.க ஸ்டாலின் வாக்குறுதி…!!

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களுடைய பரபரப்பு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர் . மேலும் பிரச்சாரத்தின் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். மக்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். இந்நிலையில் அதிமுக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார்.

அதிமுக கட்சி ஆட்சியின் தோல்விகள் மற்றும் சரிவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கிராம சபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சி அமைத்தவுடன் முதலில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். கிராமபுறங்களில் நடக்கும் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும். மேலும் தினக்கூலியாக மாற்றப்படும்” என்று கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களின்  பஞ்சு பதுக்கல்கள் தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |