Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…. வெளுத்து வாங்கும் மழை – வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை  வெளுத்து வாங்கப்போவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளதில், ஜனவரி 4 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில்ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 5 ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். இதையடுத்து 6ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யலாம்.

மேலும் 7 ம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்” என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |