Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“டெய்லி ரெண்டு ஸ்பூன்”… முடி உதிர்தல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு..!!

வெண்ணெய் பயன்படுத்தினால் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். இதனை விரிவாக இதில் பார்ப்போம்.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நம் உணவில் உட்கொள்ளும் போது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மை தரக்கூடியது. உச்சந்தலையில் ஈரப்பதம் இருந்தால் முடி உதிர்தலை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

உச்சந்தலையில் இரண்டு டீஸ்பூன் நெய்யை எடுத்து மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். பின் இந்த மசாஜ் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடிகளின் ஆயுள் காலத்தை வலுப்படுத்துகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றது. இனி அதிகப்படியான முடி உதிர்தல் ஏற்படும் பொழுது இதை செய்து பாருங்கள் நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.

Categories

Tech |