Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல் மீண்டும் பள்ளிகள்… சனி ஞாயிறும் செயல்படுத்த திட்டம்… அதிரடி அறிவிப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 8 முதல் மீண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஒடிசா அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால் இத்தகைய முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் திறக்கப்படும் அனைத்து பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக COVID தொடர்பான நெறிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு உட்பட 100 நாட்களுக்கு கற்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளியில் அனுமதியில்லை. பிற மாணவர்களும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் தான் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |