இரண்டு வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பிரசவத்தின் போதுஉயிரிழந்த சாம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்ற பகுதியில் தனது தாத்தா பாட்டியின் பராமரிப்பில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்து பார்த்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அதே பகுதியில் வசித்து வந்த 2 வாலிபர்கள் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிரசவ வலி அதிகரித்ததால் சிறுமி தேனி கே.விளக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சிறுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இசசம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சிறுமியை ஏமாற்றிய இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.