Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… “இடையூறாக இருந்த கணவன்”… போட்டுத்தள்ளிய மனைவி… சிக்கியது எப்படி..?

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர் கொலை செய்யப்பட்டவர் 28 வயது இளைஞன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் இறந்தவர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரிய நற்குணம் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநரான ஆசை என்கின்ற சத்யராஜ் என்பது தெரியவந்தது. இவரை கடந்த 17ஆம் தேதி முதல் காணவில்லை என்று இவரது மனைவி தீபா கடந்த 21ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீஸ் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

கொலையான சத்யராஜும், ஐயப்பன் என்பவரும் நண்பர்களாவார்கள். ஐயப்பன் அடிக்கடி சத்யராஜ் வீட்டிற்கு வந்து செல்வதால் அவரது மனைவி தீபா உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதலை சத்யராஜ் எச்சரித்துள்ளார். அதனால் சத்யராஜ் உயிரோடு இருந்தால் நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி தீபா மற்றும் அவரது கூட்டாளிகள் சத்யராஜ் திட்டம் போட்டு கொலை செய்து அருகில் உள்ள வாழைத்தோப்பு அழைத்து சென்று சரமாரியாக வெட்டி அவரது சடலத்தை புதைக்க ஏற்பாடு செய்தனர்.

மழை அதிகமாக இருந்த காரணத்தினால் சடலத்தை புகைக்க முடியவில்லை. இதையடுத்து சொகுசு காரை பயன்படுத்தி உடலை ராயப்பேட்டை கடற்கரை பகுதிக்கு சென்று மணலில் புதைத்து வைத்துள்ளனர். சில நாட்கள் கழித்து சடலத்தை சென்று பார்த்தபோது சடலம் மேலே வருவது போல் இருந்தது. பின்னர் நர்சரி கார்டன் சென்று புல் வாங்கி அந்த சடலத்தின் மீது போட்டு வைத்துள்ளனர். இதையடுத்து சடலம் மேலே எழுந்து கை மற்றும் வெளியே தெரிந்துள்ளது.

இதனால் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீபா மற்றும் தீபாவின் கள்ளக்காதலனை ஐயப்பன், வினோத், அருண், கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து இந்த வழக்கில் கொலை குற்றவாளியாக சத்யராஜின் மனைவி தீபாவை போலீசார் சேர்த்துள்ளனர். இவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் இரண்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |