தமிழகத்தில் தேர்தல் பணிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்களின் பட்டியலை ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ஆசிரியர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்ப்பு உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.