Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸீல் இந்த திட்டத்தில் சேர்ந்து…. சாமர்த்தியமாக சம்பாதிப்பது எப்படி…?? வாங்க பார்க்கலாம்…!!

போஸ்ட் ஆபீஸில் டெபாசிட் திட்டங்களின் மூலம் நல்ல லாபத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

தபால் அலுவலகங்களில் சேமிப்பு மற்றும் முதலீடு என்று பலவகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பிக்ஸட் டெபாசிட் , ரெகரிங் டெபாசிட் என இருவகையான சேவைகளும் தபால் நிலையங்களில் கிடைக்கின்றன. தபால் அலுவகத்தில் டெபாசிட் செய்து நல்ல லாபம் பெற வேண்டுமென்று நினைப்பவர்கள் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு களமிறங்குவது சிறந்தது. தபால் அலுவகத்தில் வெறும் 1000 ரூபாய்க்கு கூட பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்க முடியும்.

அதிகபட்ச தொகைக்கு வரம்பு கிடையாது. இந்திய தபால் துறையின் இணையதளத்தில் உள்ள தகவல்களின் படி ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான பிக்சட் டெபாசிட் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.5 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. ஐந்தாண்டு பிக்ஸட் திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் வரை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு தபால் அலுவலகத்தின் பிக்சட் டெபாசிட் திட்டம் அவர்களுக்கு ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும்.

இதுபோல தபால் அலுவலக ரெகரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதில், ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதில் அதிகபட்ச முதலீடு செய்ய வரம்புகள் கிடையாது. ரெகரிங் டெபாசிட்டுக்கு தற்போது வருடத்திற்கு 5.8% வட்டி கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். ஐந்து வருட மெச்சூரிட்டிக்கு பிறகு தேவைப்படும் பட்சத்தில் டெபாசிட் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம்.

Categories

Tech |