முன்னால் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா ஆரிக்கு ஆதரவளிப்பதாக டுவிட் போட்டுள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .இதுவரை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் எட்டு பேர் உள்ளனர். இதில் இந்த வாரம் நாமினேஷனில் சிவானி ,ரம்யா, கேபி, சோம், ஆஜித் ஆகியோர் உள்ளனர். இவர்களில் இன்று ஆஜித் வெளியேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
I'm with @Aariarujunan he will win 🎉 #bigbosstamil4 #myprediction🙏🏼
— Reshma Pasupuleti (@reshupasupuleti) January 2, 2021
இதையடுத்து இந்த வாரம் பாலாஜி மற்றும் ஆரி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இவர்களின் மோதலை பார்த்த பிக் பாஸ் ரசிகர்களில் சிலர் பாலாஜிக்கு ஆதரவாகவும், சிலர் ஆரிக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகையும் ,முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ரேஷ்மா ஆரிக்கு ஆதரவளிப்பதாக டுவிட் போட்டுள்ளார். மேலும் ஆரிதான் டைட்டிலை வெல்லுவார் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது வரை ஆரிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகிக் கொண்டே வருவதால் நிச்சயம் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என தெரிகிறது.