Categories
தேசிய செய்திகள்

2 சிறுவர்கள் கொலை… தந்தை தற்கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திருவனந்தபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே சபீர் என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வாழ்ந்து வந்தார். சபீர்க்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கணவர் சபீரை விட்டு பிரிந்து தன் சகோதரர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சபீர் தனியாக இருந்தார். தன் மகன்களை அவ்வப்போது பார்த்து வந்துள்ளார். மகன்கள் இருவரையும் தன்னோடு வெளியேயும் அழைத்து சென்றுள்ளார்.

அதே போன்று ஒரு நாள் தன் இரண்டு மகன்களையும் சபீர் ஆட்டோவில் வெளியே அழைத்துச் சென்றார். வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சபீரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டனர். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்த போது சபீரின் ஆட்டோ அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரையில் நின்று கொண்டிருந்தது. அதனைக் கண்டு ஆட்டோவின் பக்கத்தில் போன உறவினர்கள் அதனுள் ஒரு கடிதம் இருந்ததைக் கண்டறிந்தனர்.

அக்கடிதத்தில் மூத்த மகன் வீட்டில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது மகன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதனை அடுத்து இளைய மகனை தேடியபோது அவரை அங்கு காணவில்லை. அருகில் உள்ள குளத்தில் சபிரின் உடல் மிதப்பதை அங்கிருந்தவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சபிரின் உடலை மீட்டனர். மற்றும் அவரது இளைய மகனையும் தேடினர். அவரது உடலும் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. சபீர், மூத்த மகனை கழுத்தை அறுத்தும், இளைய மகனை குளத்தில் தள்ளியும் கொலை செய்துவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |