நடிகர் தனுஷ்ஷின் 43 ஆவது படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுபவர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார் . சத்யஜோதி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது . இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் திரைக்கதை,வசனம் எழுதுபவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .
@Lyricist_Vivek na🤗🎬❤️#D43 https://t.co/SHCNBexuhR
— Karthick Naren (@karthicknaren_M) January 3, 2021
பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு திரைக்கதை ,வசனம் எழுதுகிறார் என படக்குழு அறிவித்துள்ளது . பாடலாசிரியர் விவேக் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு அசத்தலான பாடல்கள் எழுதி பிரபலம் அடைந்தவர் . இவர் தற்போது தனுஷின் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளதாக வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.