Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்… மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்-பவித்ரா.  இத்தம்பதியருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லை. இதனால் பவித்ரா  மன வேதனையில்  இருந்துள்ளார். இதைப்பார்த்த பவித்ராவின் பெற்றோர் பவித்ராவை  தங்களது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக உறவினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது  உறவினர் அங்கு சென்று பார்த்தபோது பவித்ரா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் பவித்ராவை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |