போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் போராட்ட களத்தில் தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து காசியாபாத்தில் உள்ள போராட்ட காலத்தில் 70வயது விவசாயி ஒருவர், அங்குள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி தன்னை எல்லையிலேயே புதைக்குமாறு உருக்கமான கடிதம் எழுதி வைத்து அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கழிவறையில் இருந்த அந்த விவசாயியை சக விவசாயிகள் தூக்கிச் செல்லும் மனதை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆறு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?