பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெற்றோர்களுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் புதிய கொரோனோவின் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது நாளை பள்ளிகள் திறந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பள்ளிகள் திறந்திருக்கும் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை கட்டாயமாக அனுப்ப வேண்டும் என்றார். மேலும் “பள்ளிகள் தான் மிகவும் பாதுகாப்பானவை என்பதை நாம் வலியுறுத்துவது மிகவும் முக்கியம்” மேலும் இளைஞர்கள் குழந்தைகளுக்கான பாதிப்புகள் சிறியது தான் எனவும் ஊழியர்களுக்கு ஏற்படும் ஆபத்து மிக குறைவே, இதனை ஒப்பிடுகையில் கல்வியின் நன்மைகள் மிகப்பெரியது என்று பிரதமர் கூறியுள்ளார்.