Categories
Uncategorized

சோகம்! கேரளாவில் விபத்து – 7 பேர் பலி…!!

பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்திலிருந்து திருமண விழாவிற்காக ஒரு கோஷ்டியினர் பேருந்தில் கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காசர்கோடு மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. மேலும் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவருமே கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று கூரப்படுகின்றது.  பேருந்தில் சுமார் 70 பேர் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |