Categories
தேசிய செய்திகள்

ரயில் கால அட்டவணையில் அதிரடி மாற்றம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பல்வேறு ரயில்களின் நேரத்தில் குறிப்பிட்ட நாட்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிகுறித்த விபரங்களை பார்க்கலாம்.

ஜனவரி 4ஆம் தேதி முதல், தினசரி சிறப்பு ரயில்களின் நேரமாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்படி, வண்டி எண் 06079 / 06792, சென்னை சென்ட்ரல் – பெங்களூரு – சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு விரைவு ரயில், காலை 7:40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல மறுமுனையில் இரவு 8:55 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ரயில் எண் 06127 சென்னை எழும்பூர்-குருவாயூர் ரயில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்படுவது இனி 8.40க்கு புறப்படும். தாம்பரத்தில் 8.53க்கு பதில் 9.08க்கு வந்து 9.10க்கு புறப்படும். செங்கல்பட்டில் 9.38க்கு வந்து 9.40க்கும், மேல்மருவத்தூரில் 10.08 க்கு வந்து 10.10க்கும், திண்டிவனத்தில் 10.33க்கு வந்து 10.35க்கும் புறப்படும்.

இந்த மாற்றம் வரும் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை போன்று ரயில் எண் 06064 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வாராந்திர ரயில் சென்னை எழும்பூர் சென்றடைவது காலை 4.45க்கு பதில் 4.40க்கு சென்றடையும். இந்த மாற்றம் ஜனவரி 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |