‘மாநகரம்’ இந்தி ரீமேக்கான ‘மும்பை கார்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திலும் சீதக்காதி படத்தில் வயதான கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார் . இதையடுத்து விக்ரம் வேதா ,பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார் .
இந்நிலையில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி காமெடி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படம் மும்பை கார் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக்காகிறது . இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார் . தற்போது மாநகரம் படத்தில் முனீஸ் காந்த் நடித்த காமெடி கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.