இளம்பெண் மாயமான சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இளம்பெண் மாயமானத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த மாதம் 27ஆம் தேதி எட்மொண்டன் என்ற பகுதியை சேர்ந்த Billie veynal jonson என்ற 30 வயதுடைய இளம்பெண் 113 street and 107 avenue வில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதன்பின் அவர் காணாமல் போயுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி தான் அவர் காணாமல் போனது அதிகாரபூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட இந்த பெண் தன் இடது தோள்பட்டையில் பூக்களின் டாட்டூ குத்தியிருப்பார் என்ற அடையாளத்தை காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இவர் காணாமல் போனதில் மர்மம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.