மகரம் ராசி அன்பர்களே…! புதிய சந்திப்பால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும்.
வாழ்க்கைத் தேவையை தேர்ந்து எடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் காட்டிக் கொள்வார்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உயரும். தொலைபேசி தகவல் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டுவீர்கள். நல்ல காரியங்களை செய்வீர்கள். வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். மருத்துவ செலவு சிலருக்கு ஏற்படக்கூடும். வீட்டை விட்டு வெளியே தங்க வாய்ப்பு இருக்கும். கடன் விவகாரங்களில் கவனம் வேண்டும். வாக்குவாதம் இல்லாமல் யாரிடமும் பேச வேண்டும். தொழில் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இப்போதைக்கு வேண்டாம். கிடைத்த இடத்தில் சின்னதாக கடன் உதவி கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். செலவை கட்டுப்படுத்த வேண்டும்.
காதலின் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.மாணவ செல்வங்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றினால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 6.அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.