Categories
உலக செய்திகள்

ஆசியாவிலேயே முதன்முதலாக நடந்த ஓரினச் சேர்க்கை திருமணம்..!!

ஆசிய கண்டத்தில் முதன் முதலாக தைவான் அரசு ஒத்துழைப்புடன் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் ஆரவாரத்துடன் நடைபெற்றுள்ளது .

சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசானது ஓரினச் சேர்க்கைக்கு தடை இல்லை என்று அறிவித்தது. இது பலரது மத்தியில் வரவேற்பையும் பலரது மத்தியில் முகச்சுளிப்பையும்  ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் ஆசிய கண்டத்தில் உள்ள தைவான் அரசானது ஓரின சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . இதனை கொண்டாடும் விதமாக ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட ஓரின சேர்க்கை ஜோடிகள் கூடி ஆரவாரத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடி வாழ்த்து தெரிவித்துள்ளனர் .ஆசிய கண்டத்திலேயே முதல் முறையாக சட்ட அனுமதியுடன் நடைபெற்ற ஓரினச் சேர்க்கை திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |