கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்இறங்கியுள்ளனர் . இதையடுத்து ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனா தமிழகத்திற்கும் பரவியுள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த தடுப்பூசி முதலாவதாக களப் பணியாளர்களுக்கும், பின்னர் பொதுமக்களுக்கும் செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 6 லட்சம் முன் களப்பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. கோவாக்சின், கொவிஷில்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் முதல் கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.