போட்டியின் போது குதிரைப்பந்தய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரைப் பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற வீரர் பந்தயத்தின் போது குதிரையிலிருந்து கீழே எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.