மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்
சேலம் மாவட்டத்திலுள்ள பால் மார்க்கெட் என்ற பகுதியில் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது ஒருவர் லாங்கிலி ரோடு என்ற பகுதியை சேர்ந்த மந்தாரம் என்பதும், மற்றொருவர் அவரது மகன் பரத்மாலிக் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து புகையிலை பொருட்களை கடத்திய காரணத்திற்காக தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 758 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.